search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிட்டல் முறை"

    டிஜிட்டல் முறைக்கு மாறாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அரியலூர்:

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், மத்திய அரசின் டிராய் விதிமுறைகளின்படி கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் விரும்பிய சேனலை தேர்வு செய்து பார்க்கும் முறையை நடைமுறைப் படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அணுகி அதற்கான படிவங்களை பெற்று தங்களுக்கு தேவையான சேனலை பூர்த்தி செய்து கொடுத்து பயனடையலாம். மேலும், அனலாக் சிஸ்டம் நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் கேபிள் டி.வி.ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கேபிள் டி.வி. ஒழுங்கு முறைச்சட்டத்தின்படி உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அனலாக் சிஸ்டத்தை முற்றிலும் தவிர்த்து டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

    அவ்வாறு டிஜிட்டல் முறைக்கு மாறாமல் அனலாக் முறையில் வழங்கும் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறி செயல்படும் கேபிள் டி.வி.ஆபரேட்டர் களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கேபிள் டி.வி.உபகரணங் களும் பறிமுதல் செய் யப்படும்.

    எனவே, கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் அனைவரும் டிஜிட்டல் முறையில் மட்டுமே கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    ×